நீங்கள் வேண்டிய வரத்தை பெற பிரதோஷ கால மந்திரம்.

‘தோஷம்’ என்பது ‘குற்றம்’ என்ற வார்த்தையை குறிக்கின்றது. பிரதோஷம் என்றால் குற்றம் இல்லாத வாழ்க்கை என்பதை குறிக்கும். குற்றமற்ற இந்த பிரதோஷ காலத்தில் இறைவனை வழிபட்டால் நமக்கு இருக்கும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது தான் இதன் பொருள். இரவும் பகலும் சந்திக்கும் காலத்தை தான் ‘உஷத் காலம்’ என்று கூறுவார்கள். இந்த சமயத்தில் அதிதேவதையான உஷாதேவி சூரியனின் மனைவியாக இருப்பாள். இதேபோல் பகலும் இரவும் சந்திக்கும் காலத்தில் பிரதியுஷா மனைவியாக இருப்பாள். இந்த நேரம் பிரத்யுஷத் காலம் என்று கூறப்படுகிறது. பிரத்யுஷத் காலம் என்று கூறப்பட்ட இந்த காலம் பேச்சுவழக்கில் பிரதோஷ காலம் என்று மாறிவிட்டது.

இந்தப் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை நாம் வழிபட்டு வந்தால் நமக்கு இருக்கும் இன்னல்களானது தீரும் என்பது நம்பிக்கை. நம் வேண்டும் வேண்டுதல்கள் யாவும் விரைவாக பலிக்கும் என்பது நம்பிக்கை. இந்தப் பிரதோஷ சமயத்தில் ஒருமுறை நமது குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் சேர்த்து வழிபடுவதும் நல்லது. பிரதோஷ காலத்தில் அந்த சிவபெருமானின் ஆசியை முழுமையாக பெறுவதற்கு இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். உங்களுக்கான சிவமூர்த்தி ஸ்தோத்திரம் இதோ..

சிவமூர்த்தி ஸ்தோத்திரம்

1. ஓம் சிவசிவ சிவனே சிவபெருமானே போற்றி போற்றி விரைவினில் வந்தருள் விமலா போற்றி போற்றி

2. ஓம் மஹா, ஈசா மகேசா போற்றி போற்றி மனதினில் நிறைந்திடும் பசுபதியே போற்றி போற்றி

3. ஓம் மூவுலகிற்கதிபதியே முதல்வா போற்றி போற்றி மூவா இளமையருளும் முக்கண்ணா போற்றி போற்றி

4. ஓம் ஐந்தெழுத்தின் உட்பொருளே போற்றி போற்றி திரு ஐயாறமர்ந்த குருபரனே போற்றி போற்றி

5. ஓம் சத்தியமே சத்தியத்திற்கோர் திருமுகமே போற்றி போற்றி

6.ஓம் உமையொருபங்கா போற்றி போற்றி அதற்கு மோர்த்திருமுகமே போற்றி போற்றி

7. ஓம் உலகமே நாயகனே லோக நாயகா போற்றி போற்றி அகோரத்திற்கோர் திருமுகமே போற்றி போற்றி

8. ஓம் உருத்திர பசுபதியே போற்றி போற்றி

9. ஓம் உருத்திர தாண்டவ சிவனே போற்றி போற்றி

10. ஓம் ஓம் அகோர மூர்த்தியே லிங்கமே போற்றி போற்றி அதற்கு மோர்திருமுகமே போற்றி போற்றி

11. ஓம் உமையே அம்பிகையே அம்பிகையின் பாகா போற்றி போற்றி அம்பிகைக்கோர் முகமே அம்பிகா பதியே போற்றி போற்றி

12. ஓம் பஞ்சாட்சரனே பஞ்சமுகங் கொண்ட பரமனே போற்றி போற்றி

13. ஓம் சாம்பசிவ சதா சிவனே சத்குருவே போற்றி போற்றி

14. ஓம் ஜடையுடைய ஜடாதரனே ஜம்பு நாதா போற்றி போற்றி

15. ஓம் சந்திரனை சூரியனை நெருப்பைக் கொண்ட முக்கண்ணா போற்றி போற்றி

16. ஓம் கங்காதரனே கங்களா போற்றி போற்றி

17. ஓம் இடபத்தூர்ந்து செல்லும் இறைவா போற்றி போற்றி ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ பிரதோஷ தினத்தன்று பிரதோஷ காலமான 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் இந்த மந்திரத்தை ஏதாவது ஒரு சிவ ஆலயத்திற்கு சென்று கண்களை மூடி ஒரு நிமிடம் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை 11 முறை சொல்லி, பின்பு இந்த சிவமூர்த்தி ஸ்தோத்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தோடு சேர்த்து சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறந்தது.

பிரதோஷத்தில் சனிப்பிரதோஷம் என்றால் இன்னும் சிறந்தது. ஏனென்றால் சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்திய நாள் சனிக்கிழமை என்பதால் இந்த பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. எல்லா பிரதோஷத்திற்கு விரதம் இருக்க முடியவில்லை என்றாலும், சனிப்பிரதோஷத்தன்று மட்டும் ஒருவேளை உணவு அருந்தி விரதம் இருப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

Related Stories: