சென்னை: ரவி மோகன் தற்போது ‘டாடா’ பட இயக்குனரின் படம், எஸ்கே 25, ‘ஜெனி’ மற்றும் ‘தனி ஒருவன் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு நேர்காணலில் சினிமாவை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டார். அஜித்தும் கார் ரேஸூக்கு சென்றுவிட்டார். நீங்கள் எங்கே போவீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ரவி மோகன் கூலாக, ‘‘எனக்கு என்று எந்த ஆசையும் இல்லை. நான் இமயமலைக்கு சென்று செட்டிலாகிவிடுவேன்’’ என்று விரக்தியோடு பேசியிருக்கிறார். இதற்கு அவரோட விவாகரத்து மற்றும் படங்களின் தோல்வி தான் காரணமாக சொல்லப்படுகிறது. ஒரு படம் தோல்வி அடைந்தால் ஒரு படம் ஹிட் கொடுக்கும். அதற்காக இப்படியெல்லாம் முடிவு எடுக்க கூடாது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.