பழநி மலைக்கோயில் ரோப்காரில் முதியோருக்கு தனி வழி

பழநி: பழநி மலைக்கோயில் ரோப்காரில் முதியோருக்கான தனிவழி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பழநி கோயிலில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள், பழநி கோயில் கும்பாபிஷேக பணிகளை விரைவுபடுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஆக.23ம் தேதி உபயதாரர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அறங்காவலர் குழுவினர் பழநி கோயில் ரோப்கார் நிலையத்தில் முதியோர், கைக்குழந்தைகள் வைத்திருக்கும் தாய்மார்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட தனிவழியினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்….

The post பழநி மலைக்கோயில் ரோப்காரில் முதியோருக்கு தனி வழி appeared first on Dinakaran.

Related Stories: