×

பலன் தரும் ஸ்லோகம் (அனைத்து வளங்களும் பெற)

ரக்தாரவிந்த ஸங்காஸாம் உத்யத்ஸுர்ய ஸமப்ரபாம்
ததீமங்குஸம் பாஸம் பாணாந் சாபம் மநோஹரம்
சதுர் புஜாம் மஹாதேவீமப்ஸரோகண ஸங்குலாம்
நமாமி த்வரிதாம் நித்யாம் பக்தாநாமபயப்ரதாம்
- த்வரிதா ஸ்லோகம்

பொதுப் பொருள்: இந்த நித்யா தேவிக்கு தோதலா தேவி என்ற பெயரும் உண்டு. பக்தர்களுக்கு சீக்கிரமாய் அருட்பாலிப்பதால் ‘த்வரிதா’ என்று வணங்கப்படுகிறாள். தழைகளை ஆடையாக அணிந்தவள். எட்டு நாகங்களை தேவி தன் உடலில் சூடியுள்ளாள். கருநீலநிறமான இவள் முக்கண்களுடனும், நான்கு கரங்களோடும் புன்முறுவல் பூத்த திருமுக மண்டலத்துடன் பொலிகிறாள். சலங்கை, இடைமேகலை, ரத்னாபரணங்களுடன், மயில்பீலிகளைச் சூடிக்கொண்டு அலங்கார தரிசனமளிக்கிறாள். தேவியின் வரத அபய ஹஸ்தங்கள் பக்தர்களைக் காக்கக் காத்திருக்கின்றன. இத்தேவியைத் துணை கொள்வார்க்கு அணிமாதி ஸித்திகளும் ஞானமும் கைகூடும். வணங்குவோர் வாழ்வில் அனைத்து வளங்களையும் அருளும் த்வரிதாம்பிகைக்கு நமஸ்காரங்கள். கீழ்க்கண்ட திதிகளில் இத் துதியை அஷ்டமி திதியில் கூறி வழிபட அனைத்து வளங்களும் பெறலாம்.

Tags : Slocum ,
× RELATED பலன் தரும் ஸ்லோகம் (உயர் பதவி கிடைக்க...)