×

வி ம ர் ச ன ம்

மாடி வீட்டின் பணியாளர் மாஸ்டர் ராஜநாயகம் திடீரென்று கொல்லப்படுகிறார். அங்கு வசிக்கும் தொழிலதிபர் நிஷாந்த் ரூசோவும், மனைவி பாடினி குமாரும் காணாமல் போகின்றனர். சிசிடிவி கேமராவும், ஹார்ட் டிஸ்க்கும் மாய
மாகிறது. கொலைக்கான பின்னணி குறித்து விசாரித்து, காணாமல் போன அத்தம்பதியை போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜ் தேடுகிறார். அப்போது வீட்டுக்கு வந்த நிஷாந்த் ரூசோ, பாடினி குமாரைப் பற்றி எதுவும் தெரியாத நிலையில் தவிக்கிறார். இதனால் குழம்பிய நட்டி நடராஜ், புதிய ஸ்டைலில் விசாரிக்கும்போது பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் தெரியவருகிறது. பாடினி குமார் என்ன ஆனார்? வீட்டிலிருந்த பணியாளரின் படுகொலைக்கான காரணம் என்ன என்பது மீதி கதை. போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டருக்கு நியாயம் செய்த நட்டி நட்ராஜ், துரிதமான முறையில் விசாரிப்பது மட்டுமின்றி, காட்சிகளின் விறுவிறுப்புக்கும் உதவியிருக்கிறார். நிஷாந்த் ரூசோ மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பாடினி குமார் அழகாக இருக்கிறார், அற்புதமாக நடித்துள்ளார். பாடலில் கவர்ச்சியாகவும் ஆடியிருக்கிறார்.

நிழல்கள் ரவி மற்றும் நிஷாந்த் ரூசோவின் நண்பர் மூர்த்தி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆதேஷ் பாலா, வீட்டுப் பணியாளர் மாஸ்டர் ராஜநாயகம், பாடினி குமாரின் தந்தை இயக்குனர் ஆர்.அரவிந்தராஜ் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். கமர்ஷியலுடன் கூடிய கிரைம் திரில்லர் கதையுடன் மக்களுக்கான ஒரு விழிப்புணர்வு படமாக, சோர்வு ஏற்படுத்தாத வகையில் குணா சுப்பிர மணியம் இயக்கியுள்ளார். பெருமாள், மணிவண்ணன் ஆகியோரின் கேமரா, காட்சிகளுக்கு ஏற்ப பயணித்துள்ளது. பாடல்களிலும், பின்னணி இசையிலும் சரண் குமார் அசத்தியுள்ளார். மனநிலை பாதிப்பு, சூதாட்டத்தால் பாதிப்பு என்று இருவகை கதையை எழுதியுள்ள தயாரிப்பாளர் டாக்டர் செந்தில் குமார், ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். எம்பாமிங் எனப்படும் பிணச்சீரமைப்பு செய்யப்பட்ட சடலம், எத்தனை நாட்கள் வரை தாங்கும் என்று சொல்லாதது ஏனோ?

Tags : V Mar Sanam ,Master ,Rajanayakam ,Nishant Russo ,Padini Kumar ,
× RELATED தமிழை விமர்சனம் செய்தாரா? சங்கீதாவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்