×

பயத்த மாலாடு

தேவையான பொருட்கள்

பாசிப் பருப்பு - 200 கிராம்,
பொடித்த சர்க்கரை - 100 கிராம்,
வறுத்த முந்திரி, திராட்சை - தலா 25 கிராம்,
உருக்கிய நெய் அல்லது வனஸ்பதி - 150 கிராம்,
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

பாசிப் பருப்பை பதமாக, பொன்னிறமாக வறுக்கவும். பின் மிக்ஸியில் மிகவும் நைஸாக பொடித்துக் கொள்ளவும். பொடித்த பயத்த மாவுடன் சர்க்கரை தூள், ஏலக்காய் தூள், முந்திரி, திராட்சை எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கவும். கடாயில் நெய் அல்லது வனஸ்பதி விட்டு சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக மாவில் விட்டு கிளறி கெட்டி உருண்டைகளாக பிடிக்கவும். பயத்த மாலாடு ரெடி. (உருண்டை உதிர்ந்தால் மேலும் நெய்யை சூடாக்கி ஊற்றி உருண்டை பிடிக்கவும். நெய் சூடாக இருக்க வேண்டும்.)

Tags :
× RELATED காமதகனமூர்த்தி