- தேவன்
- சிவகார்த்திகேயன்
- சென்னை
- சேவியர் பிரிட்டோ
- விஜய்
- சினேகா பிரிட்டோ
- விஷ்ணுவர்தன்
- ஆகாஷ் முரளி
- முரளி
- அதர்வன
- அதிதி சங்கர்
- சரத் குமார்
- பிரபு
- குஷ்பு
சென்னை: விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, அவரது மகள் சினேகா பிரிட்டோ இணைந்து தயாரித்துள்ள படம், ‘நேசிப்பாயா’. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், பிரபு, குஷ்பு, கல்கி கோச்சலின் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். வரும் 14ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியதாவது: மாமனார் அமைவது என்பது இறைவன் கொடுத்த வரம். ஆகாஷ் முரளிக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நிறைய ஆசை இருக்கிறது. அதற்கு உதவி செய்ய அவரது மாமனார் சேவியர் பிரிட்டோ இருக்கிறார். உங்கள் தந்தை முரளிக்கு கொடுத்த இடத்தை உங்களுக்கும் தருவார்கள்.
எனக்கு மாமனார் என்றாலே ரொம்ப ஸ்பெஷல். எனக்கு அவர் தாய்மாமனாக இருந்தாலும், என்னை நம்பி அவரது பெண் ஆர்த்தியை திருமணம் செய்து கொடுத்தது மிகப்பெரிய விஷயம். அப்போது எனக்கு நிலையான ஒரு வேலை கிடையாது. டி.வியில் ஒரு எபிசோடுக்கு 4,500 ரூபாய் தருவார்கள். அவ்வளவே சம்பாதித்தாலும் பரவாயில்லை என்று, என் மாமனார் என்னை நம்பி ஆதரவு கொடுத்தார். அதனால்தான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன். இந்த மேடையில் என் மாமனாருக்கு நன்றி சொல்கிறேன். 43 வயதில் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது.
என் தந்தை இறந்த நேரம் அது. மாமாவுக்கு 2 மகள்கள். என் வீட்டில் நானும், அக்காவும் இருந்தோம். அதனால், எங்களை கவனித்துக்கொள்ள அவர் தன் வேலையை தியாகம் செய்தார். ‘படிச்சிருக்கியே. வேலைக்கு போய் ஒரு லட்ச ரூபாய் சம்பாதி’ என்று அவர் சொல்லவில்லை. ‘உன் கனவை நோக்கி செல்’ என்று எனக்குள் நம்பிக்கையை விதைத்தார். எனக்கு கிடைத்த மாதிரி ஆகாஷ் முரளிக்கும் அற்புதமான ஒரு மாமனார் கிடைத்திருக்கிறார். அந்த வாய்ப்பை அவர் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.