திரிஷா படத்திலிருந்து ரஹ்மான் திடீர் விலகல்

சென்னை: ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சூர்யா 45’ (தற்காலிக தலைப்பு). இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து, படப்பிடிப்பு விறுவிறுப்பாக கோவையில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட்டாகி இருந்தார். ஆனால், தற்போது திடீரென அவர் இப்படத்திலிருந்து விலகி விட்டார் என தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில், சூர்யா 45 படத்தின் புதிய இசையமைப்பாளர் குறித்து அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளனர்.

அதன்படி, சூர்யா 45 படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கமிட் செய்யப்பட்டுள்ளார் என ட்ரீம் வாரியார் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்சி சேர ஆல்பம் பாடல் மூலம் பிரபலமான இவர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் பென்ஸ் படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமானார். இதைத்தொடர்ந்து, தற்போது சூர்யா படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மான் விலகியதற்கு வெளிநாடுகளில் அவரது இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதே காரணமாக கூறப்படுகிறது.

Related Stories: