காக்கை வாகனம்

கூடி வாழும் பறவைகளில் காகம் ஒன்றாகும். தினமும் காக்கைக்கு பிடி சோற்றை இட்ட பின்னரே உணவருந்தும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகின்றது.  காகத்தை பித்ரு தேவதைகளின் வடிவமாகப் போற்றுகின்றனர். நீத்தார் சடங்குகளில் காக்கைக்கு உணவிடுவது முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது.

Advertising
Advertising

வாரிக் கொடுப்பதில் வரையற்ற வள்ளலாகவும், அழித்துத் தேய்த்து வாட்டி வதைப்பதில் பெரியவராகவும் இருக்கும் சனிபகவான் காக்கை வாகனத்தைக் கொண்டிருக்கின்றார். சனி பகவானைக் காக்கை வானகத்தில் வலம் வரச் செய்து விழா செய்கின்றனர். திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி ஆலயத்தில்  வீற்றிருக்கும் சனி பகவான் உலகப் புகழ் பெற்ற தெய்வமாக விளங்குகிறார். இங்கு சிறப்பு நாட்களிலும் சனிப் பெயர்ச்சி விழாக்களின் போதும் சனி பகவானைத்  தங்கக் காக்கை வானத்தில் அலங்கரித்து விழா நடத்துகின்றனர்.

Related Stories: