பேமிலி படம் விமர்சனம்

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி சந்தோஷ், ஸ்ரீஜா ரவிக்கு வக்கீல் விவேக் பிரசன்னா, ஐடி கம்பெனி ஊழியர் பார்த்திபன் குமார், திரைப்படம் இயக்க முயற்சிக்கும் உதய் கார்த்திக் ஆகிய 3 மகன்கள் இருக்கின்றனர். உதய் கார்த்திக்கிற்கு உதவ அண்ணன்கள் முடிவு செய்து, 1 கோடி ரூபாய் திரட்டி சொந்தப் படம் தயாரிக்கின்றனர். மற்றவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளான உதய் கார்த்திக்கிற்கு குடும்பத்தினர் ஆதரவு கொடுத்தும் கூட, அவரால் படம் இயக்க முடிந்ததா என்பது மீதி கதை.

திரைத்துறையில் ஜெயிக்கப் போராடும் இளைஞனின் கதையை சுவாரஸ்யமாகவும், குறைந்தபட்ச லாஜிக்குடனும் இயக்கியுள்ளார், புதியவர் செல்வகுமார் திருமாறன். உதய் கார்த்திக், கேரக்டருக்கேற்ப சிறப்பாக நடித்துள்ளார். விவேக் பிரசன்னா, பார்த்திபன் குமார் இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். ‘செட்டிலாகறதுன்னா என்ன…’ என்ற டயலாக்கில், வாழ்க்கையை அப்படியே பிழிந்து கொடுத்துள்ளார் விவேக் பிரசன்னா.

பாசம், கண்டிப்பு, மகனை ஜெயிக்க வைக்க போராட்டம் என்று, அம்மா கேரக்டரில் ஸ்ரீஜா ரவி ஸ்கோர் செய்துள்ளார். சுபிக்‌ஷா காயரோஹனம், சந்தோஷ், ஜனனி, மோகனசுந்தரம், ஆர்ஜே பிரியங்கா, அரவிந்த் ஜானகிராமன் ஆகியோரும் இயல்பாக நடித்துள்ளனர். மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு, பாடல்களுக்கு அனிவீ இசை, அஜிஷ் பின்னணி இசை, படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. சினிமாவுக்குள் சினிமா என்பது சில நேரங்களில் போரடித்துவிடும். இதில் ஒட்டுமொத்த ஃபேமிலியையும் கொண்டு வந்து, மாற்றம் தர முயற்சித்துள்ளார் இயக்குனர்.

Related Stories: