சென்னை சோழிங்கநல்லூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் உதவி மையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு

சென்னை: சோழிங்கநல்லூர் இசேவை மையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். தொலைபேசி மூலம் மக்கள் கூறும் குறைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக கேட்டறிந்து வருகிறார். இந்த ஆய்வுவின் பொது பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் தங்களது குறைகளை அரசு கவனத்து கொண்டு செல்லும் விதமாக தொலைபேசி மூலமாக தெரிவிப்பார்கள் அதைபோல் கடிதம் மூலமாக தெரிவிக்கப்படும். கடிதம் மூலமாக வரக்கூடிய புகார்களின் அடிப்படையில் அவர்களுக்கு தொடர்பு கொண்டு எவரேனும் சிக்கல்கள் என்று கேட்டு அறிவார்கள், நாவலூரில் அரசு நிகழ்வில் முதலமைச்சர் பங்கேற்ற பின்பு சென்னை திரும்பி கொண்டுருந்த வழியில் சோழிங்கநல்லூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் உதவி மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கே பணியில் இருக்கும் போதே பொதுமக்கள் தெரிவிக்கக்கூடிய புகார்களை முதலமைச்சரே நேரடியாக கேட்டறிந்தார். ஆய்வின்போது, மையத்தைத் தொடர்பு கொண்ட கோபால் என்பவரின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, கோபால் முதலமைச்சர்  மு.க. ஸ்டாலினின் உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார். குறைதீர்க்கும் மைய அலுவலர்களிடம், குறைகள் தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். வணக்கம் நான் ஸ்டாலின் பேசுகிறேன் என ஏற்கனவே தொடர்புகொண்ட பிச்சை என்பவரை அழைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். …

The post சென்னை சோழிங்கநல்லூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் உதவி மையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: