மணமாலை அருளும் மங்கல நாயகி

கீரமங்கலம் - பட்டுக்கோட்டை சாலையின் வடக்குத் திசையில் திருமணஞ்சேரி என்ற சிவத்தலம் மிக நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. இங்கே சுவாமி - கல்யாண  சுந்தரேஸ்வரர் என்றும், அம்பாள்- பெரிய நாயகி (மங்கல நாயகி) என்றும் அழைக்கப்படுகின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள், ஜாதகத்தில் ராகு-கேது தோஷம்  உள்ளவர்கள் களத்திர ஸ்தான தோஷம் உள்ளவர்கள், இங்கே வந்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து, அம்பாளுக்கு ராகு-கேது பரிகாரமாக பூஜை செய்து, குருக்கள்  தருகின்ற மாலையை வீட்டில் கொண்டு வைத்து வணங்கி பூஜை செய்துவர விரைவில் திருமணம் நடக்கும். திருமணம் முடிந்ததும் பெண்ணும்,  மாப்பிள்ளையுமாக வந்து அந்த மாலையை இங்கே உள்ள பூசாரியிடம் கொடுத்து அர்ச்சனை செய்துகொள்ள வேண்டும். சகல பாக்கியத்துடன் வாழ்வார்கள்.

 

கிளிவாகன அனுமார்

பொதுவாக ஆஞ்சநேருக்கு வாகனம் கிடையாது. ஏனெனில் இவரே சிறிய திருவடி என்ற பெயரில் திருமாலின் வாகனமாக உள்ளார். இதற்கு விதிவிலக்காக  புதுக்கோட்டை சாத்தனார் ஆலயத்தில் அனுமாருக்குக் கிளிவாகனம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

 

அழைக்க வருகிறார் அழகர்

விசேஷங்களுக்கு நாம் அழைக்கச் செல்வோம். தெய்வம் இருவீடாகத் தெருத்தெருவாக தாம்பூலம் வைத்து பக்தரை அழைக்கும் பெருமாளைத் தெரியுமா? எங்கே?  காஞ்சியில்தான். வருடந்தோறும் நடைபெறும் பிரம்மோற்சவ 3-ம் நாள் ‘வரதராஜப்பெருமாள்தான் இப்படி செய்கிறார். ஆண்டவனே அனைவரையும் அழைப்பது  அபூர்வம், ஆனந்தம்.

 

பன்னிரெண்டு இடங்களில் நாமம்

விஷ்ணு பக்தர்கள், தங்கள் உடலில் பன்னிரெண்டு இடங்களில் நாமம் போட்டிருப்பார்கள். இதற்கு காரணம் தெரியுமா? விஷ்ணுவுக்கு, கேசவ, நாராயண, மாதவ,  கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்ரம், வரமன, ஸ்ரீதர, ஹ்ருஷீகேச, பத்மநாப, தாமோதர என்னும் பன்னிரெண்டு நாமங்கள் உண்டு. இதை ‘துவாச நாமங்கள்’  என்பர். ‘துவாதச’ என்றால் ‘பன்னிரெண்டு’ இந்த நாமங்களைச் சொல்லியபடியே, பக்தர்கள் பன்னிரெண்டு இடங்களில் திருமண் (நாமம்) இடுவர். பெருமாளின்  நாமங்களைச் சொல்லியபடியே, திருமண் இடுவதால்தான் நாமம் என்றே பெயர் ஏற்பட்டது.

Related Stories: