ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக சரிவு

மேட்டூர்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்த மழையால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நிரம்பின. இந்த அணைகளுக்கு வரும் நீரின் அளவை பொறுத்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று 32 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. அருவிகளில் தண்ணீர் அதிகளவில் கொட்டுவதால், 15வது நாளாக பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் தொடர்ந்து தடை நீடிக்கிறது.இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 30,723 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 4 மணி நிலவரப்படி 33,681 கனஅடியாக வந்து கொண்டிருந்தது.இன்று காலை நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 28,203 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 33 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக 23,000 கனஅடி வீதமும், 16 கண் மதகுகள் வழியாக 10,000 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120.06 அடியாகவும், நீர் இருப்பு 93.56 டிஎம்சியாகவும் உள்ளது….

The post ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக சரிவு appeared first on Dinakaran.

Related Stories: