இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவது ஏன்? மனைவி சாய்ரா பானு பரபரப்பு பேட்டி

சென்னை: பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக, கடந்த 19ம் தேதி இரவு அவரது மனைவி சாய்ரா பானு தனது வழக்கறிஞர் வந்தனா ஷா மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த தகவல் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்த நிலையில், அன்றிரவு ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், ‘எங்கள் திருமண வாழ்க்ைக 30 ஆண்டுகளுக்குள்ளேயே முறிந்துவிட்டது என்பது நாங்கள் எதிர்பாராத ஒன்று’ என்று விளக்கம் அளித்தார்.

இதற்கு மறுநாள் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவில் கிடார் கலைஞராக பணியாற்றி வந்த மோகினி டே என்பவர், தனது கணவரை விட்டு பிரிவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். உடனே ஏ.ஆர்.ரஹ்மானையும், அவரை யும் இணைத்து வதந்திகள் வெளியானது. உடனடி யாக இதை மறுத்த ஏ.ஆர்.ரஹ்மான், தன்னைப் பற்றிய அவதூறு செய்திகளை சமூக வலைத்தளங்கள், இணையதளங்கள், யூடியூப் மற்றும் ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று, தனது வழக்கறிஞர் மூலம் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மான் மகன் ஏ.ஆர்.ஆர்.அமீன், தனது தந்தையைப் பற்றி உண்மைக்குப் புறம்பான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்தது ஏன் என்பது குறித்து நேற்று சாய்ரா பானு பரபரப்பாக பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: கடந்த 2 மாதங்களாக எனது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக நான் மும்பையில் தங்கி சிகிச்சை பெறுகிறேன்.

தொடர்ந்து நான் மும்பையிலேயே தங்கி சிகிச்சை பெற்றாக வேண்டியிருப்பதால், ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிசியான இசைப்பணிகளை விட்டுவிட்டு, என்னுடன் வந்து தங்கியிருக்க முடியாது. எனவேதான், என்னால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், 2 மகள்களுக்கும், மகனுக்கும் வீண் சிரமம் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிந்து செல்ல முடிவு செய்தேன்.

அதனால்தான் அவரை விவாகரத்து செய்தேன். எனவே, ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து யாரும் எந்தவொரு ஊடகத்திலும் அவதூறு தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள் கிறேன். தற்போது சமூக வலைத்தளங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி வெளியான தகவல்கள் அனைத்தும் பொய். இந்த உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் ஏ.ஆர்.ரஹ்மான்’ என்றார். அவரது பேட்டி வைரலாகி வருகிறது.

Related Stories: