குளத்தில் கழிவுநீர் கலப்பு: நோய் பரவும் அபாயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் அனுமந்த நகரில் உள்ள குளத்தை தூர்வாரி பராமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி அனுமந்த நகரில் குளம் ஒன்று உள்ளது. பல ஆண்டுகளாக தூர்வாராததாலும், பராமரிப்பின்றி உள்ளதாலும் இந்த குளம் மாசடைந்து உள்ளது. மேலும் அருகில் உள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் விடப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குளத்தில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளும் கொட்டப்படுவதால் தண்ணீரில் பாசி படர்ந்து பச்சை நிறமாக மாறியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் பரவும் இடமாக மாறியுள்ளது. மேலும் நிலத்தடி நீரும் மாசடைந்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதிமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதிமக்கள் நலன் கருதி, குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதுடன், குளத்தை தூர்வாரி, பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது….

The post குளத்தில் கழிவுநீர் கலப்பு: நோய் பரவும் அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: