பலன் தரும் ஸ்லோகம்(கடன் தொல்லைகள் நீங்க)

பாகாராதி-ஸுதா-முகாப்ஜமதுபம் பாலேந்து மௌளீஸ்வம்

லோகாநுக்ரஹ காரணம் ஸிவஸுதம் லோகே-ஸதத்வப்ரதம்

ராகா-சந்த்ர ஸமான-சாருவதனம் ரம்போரு-வல்லீஸ்வரம்

ஹ்ரீங்காரப்ரணவ ஸ்வரூபலஹரீம் ஸ்ரீகார்த்திகேயம்பஜே.

- சுப்ரமண்ய பஞ்சகம்.

 

பொதுப் பொருள்: பாகன் என்ற அசுரனைக்கொன்று உலகத்துக்கு நன்மை அருளிய சுப்பிரமணியரே நமஸ்காரம். இந்திரனின் மகளான தேவசேனையின் முகமாகிய தாமரைக்கு வண்டு போன்று விளங்குபவரே, பாலசந்திரனை தலையில் ஆபரணமாய் தரித்தவரே, நமஸ்காரம். உலகமனைத்தையும் பாதுகாப்பவரே, பரமசிவனின் புதல்வரே, அனைத்தையும் படைப்பவனாகிய பிரம்ம தேவனுக்கு ஓம் எனும் பிரணவத்தின் அர்த்தத்தை உபதேசித்தவரே, நமஸ்காரம். பௌர்ணமி நிலவைப் போன்ற பிரகாசமான அழகிய திருமுகத்தையுடையவரே, வள்ளியின் மணாளரே, ஹ்ரீங்காரத்துடன் கூடிய பிரணவ வடிவாக விளங்குகிறவரே, கார்த்திகேயா, நமஸ்காரம். (இத்துதியை கிருத்திகை தினத்தன்று  பாராயணம் செய்தால், கடன்கள் நிவர்த்தியாகும், மனக்கவலைகள் ஓடிப்போகும். கடன் தொல்லைகள் நீங்கும்.)

Related Stories: