கூடங்குளத்தில் அணு உலை பூங்கா மற்றும் அணுக்கழிவு மையம் அமைப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நெல்லை:கூடங்குளத்தில் அணு உலை பூங்கா மற்றும் அணுக்கழிவு மையம் அமைப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் அணு உலை பூங்கா மற்றும் அணுக்கழிவு எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் மற்றும் இரண்டாம் அணு உலைகளும் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 3 மற்றும் 4-ம் அணு உலைகளில் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதை போன்ற 5 மற்றும் 6-ம் அணுமின் நிலையத்தில் கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில் அணுமின் நிலையத்திலே எரியூட்டப்பட்ட அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே புதைபதற்கான இந்திய அணுமின் உற்பத்தி கழகம் திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அணு உலை பூங்கா மற்றும் அணுக்கழிவு எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனிடையே தமிழக அரசும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை புதைக்க கூடாது என ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் அணுக்கழிவுகளை ரஷ்யாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அணு உலை எதிர்ப்பு போரட்டகாரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்….

The post கூடங்குளத்தில் அணு உலை பூங்கா மற்றும் அணுக்கழிவு மையம் அமைப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: