தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டல குழு கூட்டம்: பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டல குழு கூட்டம் நேற்று நடந் தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. தாம்பரம் மாநகராட்சி தமிழகத்தின் 20வது மாநகராட்சியாக உருவாக்கப்பட்டு மேயராக வசந்தகுமாரி, துணை மேயராக கோ.காமராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு டி.காமராஜ், எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை, ஜெயபிரதீப் சந்திரன், வே.கருணாநிதி ஆகியோர் மண்டல தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இந்நிலையில், பெருங் களத்தூர் பகுதியில் உள்ள 4வது மண்டல அலுவலகத்தில் நேற்று காலை மண்டல குழு கூட்டம் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் டாக்டர்.எம்.இளங்கோவன் முன்னிலையில் மண்டலத் தலைவர் டி.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் 4வது மண்டலத்திற்கு உட்பட்ட 13 மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சாலை அமைத்தல், தெருவிளக்கு பராமரித்தல், குடிநீர் விநியோகம், கால்வாய்கள் தூர்வாருதல், மழைநீர் கால்வாய்கள் சீரமைப்பு என பல்வேறு கோரிக்கைகளை மாமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர். இதற்கு பதில் அளித்த மண்டலத் தலைவர் டி.காமராஜ் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.மேலும் சாலை பராமரித்தல், கால்வாய் பராமரித்தல், தெரு விளக்கு பராமரித்தல், சுகாதார பணிகள் என மொத்தம் 2 கோடியே 66 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது….

The post தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டல குழு கூட்டம்: பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: