அரூர் கூட்டுறவு சங்கத்தில் 6100 பருத்தி மூட்டை ₹2.25 கோடிக்கு ஏலம்

அரூர் : அரூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனை சங்கத்தில், 6100 பருத்தி மூட்டை ₹2.25கோடிக்கு ஏலம் போனது.அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை இந்த கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனைக்கு எடுத்து வருகின்றனர். நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 1210 விவசாயிகள், 6100 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர். இதில் ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால் ₹8,569 முதல் ₹10,032 வரை ஏலம் போனது. நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ₹2.25 கோடிக்கு பருத்தி ஏலம் நடந்தது….

The post அரூர் கூட்டுறவு சங்கத்தில் 6100 பருத்தி மூட்டை ₹2.25 கோடிக்கு ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: