அம்னெஸ்டி இந்தியாவுக்கு ரூ.51.72 கோடி அபராதம்: அமலாக்கத் துறை அதிரடி

புதுடெல்லி:  அம்னெஸ்டி இந்தியா இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் முன்னாள் சிஇஓ.வுக்கு முறையே ரூ.51.72 கோடி மற்றும் ரூ.10 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம், அம்னெஸ்டி இந்தியா இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட். இது, இந்தியாவின் அந்நிய செலாவணி சட்டத்தை மீறி பல்வேறு வெளிநாடுகளுக்கு தனத இந்திய நிறுவனங்கள் மூலமாக மிகப்பெரிய ெதாகையை அனுப்பியுள்ளது. இது தொடர்பாக கூறப்பட்ட புகார்களை விசாரித்த அமலாக்கத் துறை, இந்த நிறுவனம் குற்றத்தில் ஈடுபட்டதை உறுதி செய்துள்ளது.  இந்நிலையில், அந்நிய செலாவணி சட்டத்தை  மீறிய சட்ட விரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதற்காக இந்த நிறுவனம் ரூ.51.72 கோடியை அபராதமாக செலுத்த வேண்டும் என்று அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஆகர் படேலுக்கு ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது….

The post அம்னெஸ்டி இந்தியாவுக்கு ரூ.51.72 கோடி அபராதம்: அமலாக்கத் துறை அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: