மாமல்லபுரத்தில் முன்னறிவிப்பின்றி திடீர் மின் வெட்டு: பொதுமக்கள் கடும் அவதி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், முன்னறிவிப்பின்றி திடீரென சுமார் 12 மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். மாமல்லபுரம்  நகரின் அரசு அலுவலகங்களான தொல்லியல் துறை, சுற்றுலா துறை, சுற்றுலா வளர்ச்சி கழக விடுதி, பூம்புகார் கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகம், பொதுப்பணி துறை மாளிகை, பேரூராட்சி நிர்வாகம், வருவாய் ஆய்வாளர், விஏஓ, டிஎஸ்பி, மகளிர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதேப்போல், ஓட்டல், ரிசார்ட்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகள் அதிகம் உள்ளன. மேலும், அதிக அளவிலான குடியிருப்புகளும் உள்ளன. இதில், பூஞ்சேரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக முன்கூட்டியே அறிவிப்பு இல்லாமல் சுமார் 12 மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் மாமல்லபுரம், பூஞ்சேரி, மணமை, கொக்கிலமேடு, வெண்புருஷம், தேவனேரி, சாவடி, கடம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் முன்னறிவிப்பின்றி திடீரென மின் தடை செய்த, மாமல்லபுரம் மின்வாரிய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், மாதாந்திர பராமரிப்பு பணிக்கு முன்கூட்டியே ஒரு நாளுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பூஞ்சேரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள எந்தவொரு அறிவிப்புமின்றி நேற்று காலை 8 மணிக்கு மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. பின்னர், சுமார் 11.30 மணி நேரத்துக்குபின் இரவு 7.30 மணிக்கு மின் வினியோகம் சீரானது. பல முறை மின் அலுவலகத்துக்கும், மின் ஊழியர்களை தொடர்பு கொண்டும் யாரும் போனை எடுக்கவில்லை. இருப்பினும், அலுவலகத்திற்கு சென்று நேரில் விசாரிக்க சென்றபோது பணியில் யாரும் இல்லை என்றனர். இதனால், பொதுமக்கள், ஓட்டல் நிர்வாகங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தனர்….

The post மாமல்லபுரத்தில் முன்னறிவிப்பின்றி திடீர் மின் வெட்டு: பொதுமக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: