×

ரஜினிகாந்த் நலம் பெற சத்யராஜ் வாழ்த்து

Rajinikanth, Sun Pictures, SatyaRaj

நடிகர் ரஜினிகாந்த் நலம் பெற்று, மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு கூலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் சத்யராஜ். இந்நிலையில் 2 தினங்களுக்கு முன் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் சேர்க்கப்பட்டார்.

இதயத்துக்கு செல்லும் ரத்த நாளத்தில் அவருக்கு வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு 4 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டு, வயிற்றுப் பகுதியில் ஸ்டன்ட் வைக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடல் நலம் தேறினார். பின்னர் சாதாரண வார்டுக்கு அவர் மாற்றப்பட்டார். நாளை அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சத்யராஜ் வெளியிட்ட வீடியோவில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலம் தேறி, பூரண குணமடைந்து பணிக்கு திரும்ப வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

The post ரஜினிகாந்த் நலம் பெற சத்யராஜ் வாழ்த்து appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Satyaraj ,Rajinikanth ,Sathyaraj ,Kooli ,Chennai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நடிகர் ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து