×

17 வயதில் முதல் திருமணம் செய்த நடிகை பிரியா கில் 47 வயதில் 2வது ரகசிய திருமணம்

மும்பை: 17 வயதில் திருமணம் செய்த நடிகை, கணவரை பிரிந்து 47 வயதில் இரண்டாவது திருமணம் செய்ததாக தெரிவித்துள்ளார். அஜித் குமார் ஜோடியாக ‘ரெட்’ படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை பிரியா கில். இந்தியில் பல படங்களில் நடித்தார். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே மைனராக இருக்கும்போதே இவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர் குடும்பத்தினர். சினிமாவுக்கு நடிக்க வந்த சில நாட்களிலேயே கணவரை பிரிந்துவிட்டார். இந்நிலையில் பல வருடம் கழித்து ரகசிய திருமணம் செய்தது குறித்தும் தனக்கு மகள் இருப்பது குறித்தும் பிரியா கில் மனம் திறந்து பேசியுள்ளார். இது பற்றி அவர் கூறியது: எங்கள் குடும்பத்தில் பெண்கள் மைனராக இருக்கும்போதே திருமணம் நடந்து விடும். எனக்கும் 17 வயதிலேயே திருமணம் செய்து வைத்தனர். 19 வயதில் நான் சினிமாவுக்கு வந்தேன்.

படங்களில் ஹீரோவுடன் நெருக்கமாக நடித்ததால் எனது திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. சினிமாவுக்கு நடிக்க வந்த வருடமே விவாகரத்து ஆகிவிட்டது. அதன் பிறகு நடிப்பில் பிசியாகிவிட்டதால் திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை. 30 வயதுக்கு பிறகு சினிமா வாய்ப்புகள் குறைந்தது. சில வருடங்களுக்கு முன் ஃபிக்ஸர் என்ற வெப்சீரிஸில் நடித்தேன். அப்போது அதில் என்னுடன் சேர்ந்து நடித்த நடிகர் ரவி கேசருடன் காதல் ஏற்பட்டது. 4 வருடம் காதலித்தோம். பிறகு ரகசியமாக திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். 47ல் திருமணம் முடித்தேன். இப்போது எனக்கு 49 வயதாகிறது. இது புது வாழ்க்கையாக அனுபவித்து வாழ்கிறேன். இவ்வாறு பிரியா கில் கூறினார்.

Tags : Priya Gill ,Mumbai ,Bollywood ,Ajith Kumar ,
× RELATED சினிமாவா எடுக்குறாங்க பாலிவுட்காரங்க?: கங்கனா கடும் விமர்சனம்