×

தன்னிடம் 12 ஆண்டாக இருந்த டிரைவரை நடிகராக்கிய யஷ்

பெங்களூரு: கர்நாடகத்தை சேர்ந்தவர் ராமச்சந்திர ராஜு. இவர் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். பின்னர் நண்பர் மூலம் பரிச்சயம் ஆகி, யஷ்ஷிடம் வேலைக்கு சேர்ந்தார். யஷ் இவரை டிரைவராக வேலையில் சேர்த்துக்கொண்டார். அத்துடன் ராஜு, ஆஜானுபாகுவான தோற்றத்துடன் இருந்ததால் தனது பாதுகாவலராகவும் நியமித்தார். இப்படி 12 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த ராஜுவுக்கு திடீரென ஒரு நாள் லக் அடித்தது.

‘கேஜிஎஃப்’ முதல் பாகத்தின் கதையை கூற இயக்குனர் பிரசாந்த் நீல், யஷ் வீட்டுக்கு வந்தார். அப்போது ராஜுவை பார்த்து சிறிது நேரம் மலைபோல் நின்றுவிட்டாராம். காரணம், படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய வில்லன் வேடத்துக்கு அவர் சரியாக இருப்பார் என நினைத்திருக்கிறார். இதைச் சொன்னால் யஷ் என்ன நினைப்பாரோ என யோசித்து, தயங்கியபடியே யஷ்ஷிடம் சொல்லி இருக்கிறார்.

உடனே யஷ், அதற்கென்ன ராஜுவை நடிக்க வைத்துவிட்டால் போச்சு என்று கூறியுள்ளார். ஆனால் ராஜுவோ தனக்கு நடிப்பு வராது என மறுத்துள்ளார். ஆனால் அவரை கட்டாயப்படுத்தி நடிப்பு பயிற்சி வகுப்புக்கு அனுப்பி தயார் செய்திருக்கிறார் யஷ். அதன் பிறகு ‘கேஜிஎஃப்’ படத்தில் கருடா வேடத்தில் அவரை நடிக்க வைத்தார். இந்த தகவல் இப்போதுதான் வெளியே தெரியவந்துள்ளது. இப்போது கைவசம் 5 படங்களை வைத்திருக்கிறார் ராஜு.

Tags : Yash ,Bangalore ,Ramachandra Raju ,Karnataka ,Raju ,
× RELATED மனைவி, மாமியாரின் துன்புறுத்தலுக்கு...