×

2040ல் கற்பனை உலகில் நடக்கும் கதை யுஐ: உபேந்திரா தகவல்

சென்னை: லஹரி பிலிம்ஸ், வீனஸ் எண்டர்டெயினர்ஸ் சார்பில் ஜி.மனோகரன், கே.பி.ஸ்ரீகாந்த் தயாரித்துள்ள பான் இந்தியா படம், ‘யுஐ’. உபேந்திரா இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். இன்று திரைக்கு வரும் இப்படத்துக்கான சந்திப்பு சென்னையில் நடந்தது. இணை தயாரிப்பாளர் நவீன், தயாரிப்பாளர் சமீர், பாடலாசிரியர் மதன் கார்க்கி, விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன், ஹீரோயின் ரேஷ்மா ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது உபேந்திரா பேசுகையில், ‘பல கன்னடப் படங்களை இயக்கியுள்ள நான், பல வருடங்களுக்குப் பிறகு ‘யுஐ’ படத்தை இயக்கி நடித்துள்ளேன்.

டிரைலரில் பல வித்தியாசமான விஷயங்கள் இடம்பெற்றிருந்தது. அதுவே இப்படத்தின் கதையைச் சொல்லிவிடும் என்றாலும், கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராததாக இருக்கும். இப்படத்தின் கதை வரும் 2040ல் நடக்கிறது. இது ஒரு கற்பனையான, மிகவும் விசித்திரமான உலகம். படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயம் தோன்றும். ‘காந்தாரா’ பி.அஜ்னீஷ் லோக்நாத்தின் பின்னணி இசையும், பாடல்களும் படத்தை இன்னொரு உயரத்துக்கு கொண்டு செல்லும்’ என்றார்.

Tags : Chennai ,India ,G. Manoharan ,K.P. Srikanth ,Lahari Films ,Venus Entertainers ,Upendra ,Naveen ,Sameer ,
× RELATED நடுவானில் இயந்திர கோளாறு கோவைக்கு...