காந்தி மாநகர் காமாட்சியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா

கோவை: கோவை காந்திமாநகர் ஸ்ரீராம் நகர் 2வது வீதியில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் ஏழாம் ஆண்டு  திருவீதி உலா மற்றும் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி இன்று காலை 6 மணிக்கு அம்மனுக்கு மஹா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்பு காலை 9 மணிக்கு செல்வவிநாயகர் கோயிலில் இருந்து பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்து பால்குட அபிஷேகம் அலங்கார மஹாதீபாரதனையும், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது.

Advertising
Advertising

அதேபோல வெள்ளிக்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு மங்கள இசை, வேத பாராயாணம், 108 மூல மந்திர திரவியாஹுதி யோகம், மஹா அபிஷேகம், பூர்ணாஹூதி கலாபிஷேகம், அலங்கார தீபாரதனையும் நடைபெறுகிறது. காலை 11:30 மணிக்கு மஹா அன்னதானமும், அன்று மாலை 5 மணிக்கு செல்வ விநாயகர் ஆலயத்திலிருந்து மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்வும் நடைபெறுகிறது.  இதற்கான ஏற்பாடுகளை  கோயில் நிர்வாகிகள் அமாவாசை அன்னதானக்குழுவினர் செய்துள்ளனர்.

Related Stories: