2 கோயில்களில் திருட்டுப்போன வெண்கல சுவாமி சிலைகள் மீட்பு!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை மஞ்சள் ஆற்றங்கரையில் புகழ்பெற்ற வெள்ளை வேம்பு மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சில மாதங்களுக்கு முன் 24 கிலோ எடை உள்ள வெண்கல ஐயப்பன் சுவாமி சிலை, கடந்த டிசம்பர் மாதம் சிவராமபுரம் அக்ரஹாரத்தில் உள்ள ராகவேந்திரா ஆசிரமத்தில் 23 கிலோ எடை உள்ள 2 வெண்கல சிலைகள் திருட்டு போனது. இதுகுறித்து குத்தாலம் போலீசில் அளித்த புகாரின்பேரில் தனிப்படை போலீசார் சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மயிலாடுதுறை மாவட்டம் கடலங்குடியை சேர்ந்த கார்த்திகேயன்(38), தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா எடையாநல்லூரை சேர்ந்த பாஸ்கர்(40) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில், இவர்கள் இருவரும் தான் சிலைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இவர்களிடமிருந்து 3 சிலைகளை மீட்டு குத்தாலம் காவல் நிலையத்துக்கு நேற்று எடுத்து வந்தனர். இந்த சிலைகளை எஸ்பி நிஷா பார்வையிட்டார்….

The post 2 கோயில்களில் திருட்டுப்போன வெண்கல சுவாமி சிலைகள் மீட்பு! appeared first on Dinakaran.

Related Stories: