ராட்சசன், ஓ மை கடவுளே தயாரிப்பாளர் டில்லி பாபு மரணம்

சென்னை: தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு, கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை காலமானார்.
2015-ம் ஆண்டு ‘உறுமீன்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் டில்லி பாபு. அதனைத் தொடர்ந்து ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் ‘மரகத நாணயம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’, ‘பேச்சிலர்’, ‘மிரள்’ மற்றும் ‘கள்வன்’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இதில் ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘பேச்சிலர்’ ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பினை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. ‘வளையம்’ என்ற பெயரில் தனது மகன் தேவ் நடிக்க ஒரு படத்தினை தயாரித்து வந்தார். அவரது மரணம் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

The post ராட்சசன், ஓ மை கடவுளே தயாரிப்பாளர் டில்லி பாபு மரணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: