விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ தேரோட்டம்

பள்ளிகொண்டா: விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயில் பிரமோற்சவத்தின் 7ம் நாளான நேற்று வெகுவிமரிசையாக திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் மரகதாம்பிகை உடனுறை மார்கபந்தீஸ்வரர் கோயிலில் கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கி நடந்து வருகிறது. பிரமோற்சவத்தின் 6ம் நாளான நேற்றுமுன்தினம் யானை வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

7ம் நாளான நேற்று காலை உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து காலை 9 மணிக்கு திருத்தேர் உற்சவம் தொடங்கியது. நிகழ்ச்சியில் எம்எல்ஏ நந்தகுமார் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். இதையொட்டி தீயணைப்பு துறை மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: