பாலியல் புகார் நடிகை ரேவதி சம்பத் எனக்கு தெரியாது: ரியாஸ் கான் மறுப்பு

சென்னை: ‘பாலியல் புகார் கூறிய நடிகை ரேவதி சம்பத் யார் என்றே எனக்கு தெரியாது’ என்றார், நடிகர் ரியாஸ்கான். மலையாளப் படவுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டியின் அறிக்கை சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

அது வெளியான பின்பு பல நடிகைகள், தங்களுக்கும் பல பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக கூறி வருகின்றனர். நடிகை ரேவதி சம்பத், ‘‘தமிழ் நடிகர் ரியாஸ்கான் எனக்கு போன் செய்து, ‘எனது ஆசைக்கு இணங்கும் உனது தோழிகள் யாராவது இருந்தால் சொல்’ என்று கேட்டார்’’ என்று பகீர் புகார் கூறினார்.

இதுகுறித்து ரியாஸ்கான் கூறுகையில், ‘ரேவதி சம்பத் யார் என்றே எனக்கு தெரியாது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். இதுவரை என்மீது யாரும் பாலியல் புகார் சொன்னது இல்லை. இது தொடர்பாக ஹேமா கமிட்டி விசாரித்தால், அதை நான் சந்திக்க தயாராக இருக்கிறேன்’ என்றார்.

The post பாலியல் புகார் நடிகை ரேவதி சம்பத் எனக்கு தெரியாது: ரியாஸ் கான் மறுப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: