இதுபோன்ற ‘ஒன்-நைட் ஸ்டாண்ட்’ கலாசாரம் வெளிநாட்டில் பொதுவானவையாக உள்ளது. ஆனால் இந்தியாவில் அவ்வளவாக பொதுவானதாக பரவவில்லை. ஆனால் பாலிவுட் படங்களில் ‘ஒன்-நைட் ஸ்டாண்ட்’ போன்ற காட்சிகள் வைக்கப்படுகின்றன. இதுபோன்ற ‘ஒன்-நைட் ஸ்டாண்ட்’ அனுபவங்களையும் பல திரைப்பட நட்சத்திரங்கள் தங்களது நிஜ வாழ்க்கையிலும் சந்தித்தாக வெளிப்படையாக ஒப்புக் கொண்டனர். அவர்கள் பல நேர்காணல்களில் தெரிவித்துள்ளனர். அந்த பட்டியலில், நடிகர் சல்மான் கானிடம் ‘ஒன்-நைட் ஸ்டாண்ட்’-யில் தான் இருந்ததாகவும், பின்னர் அவரை பிரிந்ததாகவும் அவரது முன்னாள் காதலி சோமி அலி தெரிவித்துள்ளர்.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், தான் திருமணத்திற்கு முன்பு ‘ஒன்-நைட் ஸ்டாண்ட்’ வைத்திருந்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் சில நடிகர்களான கிருஷ்ணா அபிஷேக், இம்ரான் ஹாஷ்மி ஆகியோரும் நேர்காணல் ஒன்றில் தாங்கள் ‘ஒன்-நைட் ஸ்டாண்ட்’-யில் இருந்ததை ஒப்புக் கொண்டனர். நடிகைகளை பொருத்தமட்டில் ஷெர்லின் சோப்ரா, சன்னி லியோன், சோனால் சவுகான் ஆகியோரும் ‘ஒன்-நைட் ஸ்டாண்ட்’ உறவில் இருந்ததாக வெளிப்படையாக ஒப்புக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சமூக வலைதளங்களில் ‘ஒன்-நைட் ஸ்டாண்ட்’ கலாசாரம் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதால், அதில் ஈடுபட்ட பாலிவுட் பிரபலங்கள் குறித்தும் அதிகம் பேசி வருகிறார்கள்.