சங்கரன்கோவில் மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் 2ம் தெருவில் அமைந்துள்ள வரம் தரும் மாரியம்மன் கோயிலில் 14ம் ஆண்டு பூக்குழி திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை பால்குடம் வீதியுலாவும், அதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பொங்கலிட்டு படையல் செய்து வழிபாடு நடத்தினர்.

Advertising
Advertising

பின்னர் முளைப்பாரி , அக்னிசட்டி ஊர்வலமும், வரம் தரும் மாரியம்மன் பூக்குழி நடைபெறும் இடத்தில் சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து குருநாதர் தமிழரசன் முதலில் பூக்குழி இறங்க அவரை தொடர்ந்து திரளான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இதில் சுற்று பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஓம்சக்தி இருக்கன்குடி பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: