தூத்துக்குடி பத்ரகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

தூத்துக்குடி: தூத்துக்குடி வடபாகம் டேவிஸ்புரம் ரோடு நாடார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா விழா, நேற்று நடந்தது. இதையொட்டி காலை 9.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, பிம்பசுத்தி, மூர்த்தி ரக்‌ஷாபந்தனம், நான்காம் கால யாகசாலை பூஜை, நாடிசந்தானம், ஸ்பர்ஸாகுதி, திரவ்யாகுதி, மகா பூர்ணாகுதி, யாத்ராதானம், கடம் எழுந்தருளல் நடைபெற்றது. காலை 10 மணிக்கு மேல் 10.45க்குள் மகா கும்பாபிஷேகமும், 11.30 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மதியம் _வெற்றிவேல் காந்தாலட்சுமி கல்யாண மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழா தலைவர் செண்பகராஜ் நாடார், செயலாளர் பொன்தனராஜ் நாடார், துணை செயலாளர் பாலகிருஷ்ணன் நாடார், துணை தலைவர் பாஸ்கரன் நாடார், பொருளாளர் பால்ராஜ் நாடார், கமிட்டியார்கள் வரதராஜன் நாடார், விக்னேஷ் நாடார், ராஜகோபாலன் நாடார், பால்தங்கவேல் நாடார், ராமர் நாடார், கவுதமன் நாடார், பொன்வெங்கடேஷ் நாடார், கனகராஜ் நாடார், சூர்யகுமார் நாடார், ராஜ்குமார் நாடார், மகேஸ்வரன் நாடார், மகாராஜன் நாடார், அறிவழகன் நாடார் செய்திருந்தனர்.

Related Stories: