லத்தூர் தெற்கு ஒன்றியத்தில் திமுக இளைஞரணி கூட்டம்: எம்பி, எம்ஏல்ஏ பங்கேற்பு

திருக்கழுக்குன்றம்: லத்தூர் தெற்கு  ஒன்றிய சார்பில், திமுக இளைஞரணி கூட்டம் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில், ‘திராவிட மாடல்’ பயிற்சி பாசறை கூட்டம், லத்தூர் ஒன்றியம்   வடபட்டினத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது. ஒன்றிய திமுக பொறுப்பாளர் எம்.எஸ்.பாபு தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அருண்மொழிவர்மன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மணி, பால்ராஜ் முன்னிலை வகித்தனர். இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், திமுக தொழில் நுட்ப ஆலோசகர் மனுஷ்யபுத்திரன், லெனின், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அப்துல் மாலிக் சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில், லத்தூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் சுப்புலட்சுமி பாபு, ஒன்றியக்குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம், மாவட்ட கவுன்சிலர் ஜெயலட்சுமி மகேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் மோகன்தாஸ், ஒன்றிய பொருளாளர் ரங்கநாதன், இடைக்கழிநாடு பேரூர் செயலாளர் இனியரசு உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெயசூர்யா நன்றி கூறினார்….

The post லத்தூர் தெற்கு ஒன்றியத்தில் திமுக இளைஞரணி கூட்டம்: எம்பி, எம்ஏல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: