ஊட்டியில் பொலிவிழந்து காட்சியளிக்கும் நகராட்சி பூங்கா-பராமரிக்க மக்கள் வலியுறுத்தல்

ஊட்டி :  ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே பாறை முனிஸ்வரன் கோயில் அருகே நகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் சிறு பூங்கா அமைத்தது. அந்த பூங்காவில் செயற்கை நீருற்று, அலங்கார இருக்கைகள் நடைபாதைகள் போன்றவை அமைக்கப்பட்டன. ஆரம்பத்தில் முறையாக பராமரிக்கப்பட்ட நிலையில் அதன் பின் பராமரிப்பதில் நகராட்சி அக்கறை காட்டவில்லை. இதனால், அந்த பூங்காவில் களைசெடிகள் வளர்ந்து பொலிவிழந்து காணப்படுகிறது. மேலும் செயற்கை நிரூற்றும் செயல்படாமல் உள்ளது. எனவே, இந்த சிறுபூங்காவை பராமரித்து சுற்றுலா பயணிகள் மற்றும் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் ஓய்வுவெடுக்க நகராட்சி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. …

The post ஊட்டியில் பொலிவிழந்து காட்சியளிக்கும் நகராட்சி பூங்கா-பராமரிக்க மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: