×

12 வயதில் முதல் சம்பளம் ரூ.1 கோடியை தானம் செய்த மகேஷ் பாபு மகள்

ஐதராபாத்: மகேஷ் பாபு மகள் சித்தாரா தனது முதல் சம்பளமான ரூ.1 கோடியை தொண்டு நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறார். மகேஷ் பாபு, நம்ரதா ஷிரோட்கர் தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பனிரெண்டு வயதான மகள் சித்தாராவுக்கு கிடார் வாசிப்பது, நீச்சல் பிடிக்கும். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில் அவருக்கு ஆடை விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் நடித்த சித்தாராவுக்கு 1 கோடி ரூபாய் சம்பளமாக தரப்பட்டது.

உடனே அந்த பணத்தை தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு அளிக்க அவர் முடிவு செய்தார். அதன்படி மகேஷ்பாபு சித்தாராவின் சம்பளத்தை அந்த அமைப்புக்கு வழங்கிவிட்டார். மகேஷ்பாபு, தனது அறக்கட்டளை மூலம் ஏழை குழந்தைகளின் இதய ஆபரேஷனுக்கு உதவி வருகிறார். ஆந்திரா, தெலங்கானாவில் சில கிராமங்களை தத்தெடுத்துள்ளார். ஏழை மாணவர்களின் கல்விக்கும் உதவி வருகிறார்.  ‘அப்பாவின் நல்ல குணம்தான் மகளுக்கும் வந்திருக்கிறது. இதில் ஆச்சரியமில்லை’ என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

The post 12 வயதில் முதல் சம்பளம் ரூ.1 கோடியை தானம் செய்த மகேஷ் பாபு மகள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mahesh Babu ,Hyderabad ,Sithara ,Namrata Shirodkar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பாலிவுட் போகிறார் ஸ்ரீலீலா