அமெரிக்கா வரும் சர்வதேச பயணிகளுக்கு இனி கட்டாய கொரோனா பரிசோதனை கிடையாது: அமெரிக்க அரசு அதிரடி..!!

வாஷிங்டன்: அமெரிக்கா வரும் சர்வதேச பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என அந்நாடு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையிலும், அத்தொற்றுக்கான தடுப்பூசிகள் வந்துவிட்ட நிலையிலும் கட்டுப்பாடுகளை தொடர தேவையில்லை என அமெரிக்க அரசு கருதுகிறது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. சர்வதேச பயணிகளுக்கான கொரோனா பரிசோதனை கட்டுப்பாடு வார இறுதியுடன் நிறைவுக்கு வருவதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து வரும் திங்கட்கிழமை முதல் அமெரிக்கா வரும் சர்வதேச பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை கிடையாது. இருப்பினும் பயணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 90 நாட்களில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்ததற்கான சான்றிதழை உடன் வைத்திருக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்கா செல்பவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் காட்டினால் மட்டுமே அந்நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது….

The post அமெரிக்கா வரும் சர்வதேச பயணிகளுக்கு இனி கட்டாய கொரோனா பரிசோதனை கிடையாது: அமெரிக்க அரசு அதிரடி..!! appeared first on Dinakaran.

Related Stories: