வேலூர்: வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணன் 3 நாட்களுக்கு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது காட்பாடி காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவர் பைக்கில் ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்வதை பார்த்துள்ளார். இதையடுத்து எஸ்பி உத்தரவின்படி அந்த போலீஸ்காரருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டும் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று எஸ்பி ராஜேஷ்கண்ணன் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து எஸ்பி ராஜேஷ்கண்ணன் கூறுகையில், ‘‘வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார் பைக்கில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். போலீசார் ஹெல்மெட் அணியாமல் செல்வது, பைக்கில் பல்வேறு டிசைன்களில் பதிவெண் ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக போலீசார் இருக்க வேண்டும். போலீசார் ஹெல்மெட் அணிவதால் அவர்களை பார்த்து பொதுமக்களும் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை தெரிந்து கொள்ள முடியும்’’ என்றார்….
The post ஹெல்மெட் அணியாவிட்டால் போலீசார் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.
