பாண்டிபத்திரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி திருவிழா

அறந்தாங்கி: ஆவுடையார்கோவில் அருகே உள்ள பாண்டிபத்திரம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்று அம்மனை வழிபட்டனர். பாண்டிபத்திரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் மண்டகப் படிதாரர்களால் அம்பாள் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான காவடி எடுப்பு விழா நேற்று நடந்தது. பக்தர்கள் பால்காவடி, மலர் காவடி, பால்குடம் எடுத்துவந்து அம்பாளை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Related Stories: