ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே வீரபக்தர ஆஞ்சநேயர் ேகாயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. திருச்செங்கோடு அருகே காளிப்பட்டியில் சென்றாய பெருமாள் கோயிலில், வீரபத்தர ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. ஆவணி அமாவாசையையொட்டி, ஆஞசநேயருக்கு சிறப்பு அபிசேக, அலங்காரம், பூஜை நடந்தது. ஆஞ்சநேயர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பத்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆட்டையாம்பட்டி, மங்களம், முத்தனம்பாளையம், மல்லசமுத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: