பாரதிராஜாவுக்கு தாதா சாகிப் பால்கே விருது: ஒன்றிய அரசுக்கு இயக்குனர் சங்கம் கோரிக்கை

சென்னை: ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிக்க, பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்கியுள்ள படம், ‘கள்வன்’. வரும் ஏப்ரல் 4ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா, பாரதிராஜா நடித்துள்ளனர். பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க, ரேவா பின்னணி இசை அமைத்துள்ளார். சத்தியமங்கலம் வனப்பகுதியில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

இப்படம் சம்பந்தமான விழாவில் படக்குழுவினருடன் சத்யஜோதி ஜி.தியாகராஜன், வெற்றிமாறன், தனஞ்செயன், டி.சிவா, பேரரசு, சினேகன், சக்திவேலன் கலந்துகொண்டனர். அப்போது தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது: அதுநாள்வரைக்கும் ஸ்டுடியோக்களில் மட்டுமே படமாக்கப்பட்டு வந்த திரைப்படங்களை வயல்வெளிகளிலும், ரோடு
களிலும், வெளிப்புறங்களிலும் நடத்தி வெற்றிபெற்று, தமிழ் சினிமாவுக்கு புதிய பாதையை அமைத்துக் கொடுத்தவர் பாரதி ராஜா.

அவருக்கு இயக்குனர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி தொழிலாளர் சங்கம் சார்பில் விரைவில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. திரையுலகில் சாதித்தவர்களுக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்படுகிறது. ஒருவரது சாதனையை அவர் உயிருடன் இருக்கும்போதே அங்கீகரிக்க வேண்டும். இந்திய சினிமாவில் சாதனை படைத்த பாரதிராஜா வுக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்க ஆவன செய்ய வேண்டும் என்று, திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் ஒன்றிய அரசுக்கு கோரிக்கையை விடுக்கிறோம்.

The post பாரதிராஜாவுக்கு தாதா சாகிப் பால்கே விருது: ஒன்றிய அரசுக்கு இயக்குனர் சங்கம் கோரிக்கை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: