காரைகுறிச்சி கிராமத்தில் மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே காரைக்குறிச்சி கிராமத்தில் மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 50 வருடங்களுக்கு பிறகு  நடத்தப்பட்டது. கோயில் வளாகத்தில் உள்ள சக்திவிநாயகர், வீரன் உள்ளிட்ட  சுவாமிகளுக்கும் 25 அடி உயரம் கொண்ட புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட காளியம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு யாகசாலை கோ பூஜை பூர்ணாகுதி ஆகியவை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தன. நேற்று காலை கும்பாபிஷேகம், அபிஷேகம் தீபாராதனை போன்றவை நடைபெற்றன. மதியம் அன்னதானமும் நடைபெற்றது. விழாவை காண சுற்றியுள்ள அருள்மொழி இருகையூர் வேணாநல்லூர் மதனத்தூர் வாழைகுறிச்சி சிந்தாமணி தா.பழூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு  சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: