ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வாகனத்திற்குள் குண்டு வெடித்ததில் 3 ராணுவ வீரர்கள் காயம்.!

ஜம்மு; ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் இருந்த தனியார் வாகனத்தில் திடீரென வெடிகுண்டு வெடித்தது ஜம்மு காஷ்மீர், ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் இன்று ராணுவ வீரர்கள் இருந்த தனியார் வாகனத்தில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. இதில் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகனத்தில் ஏற்கெனவே வெடிகுண்டு இருந்ததால், அல்லது வாகனத்தின் பேட்டரி செயலிழந்ததன் காரணமாக வாகனம் விபத்துக்குள்ளானதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றன்ர். குண்டுவெடிப்பால், வாகனம் மிகவும் சேதமடைந்துள்ளது. வெடி விபத்தின் தீவிரம் காரணமாக, இது வாகனத்தின் பேட்டரி வெடித்தால் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன….

The post ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வாகனத்திற்குள் குண்டு வெடித்ததில் 3 ராணுவ வீரர்கள் காயம்.! appeared first on Dinakaran.

Related Stories: