பொரித்த கூட்டு

என்னென்ன தேவை?

Advertising
Advertising

புடலங்காய் - 1/2 கிலோ,

பாசிப்பருப்பு - 1/2 கப்,

கீறிய பச்சைமிளகாய் - 3,

தேங்காய்த்துருவல் - 1/4 கப்,

உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்,

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,

முந்திரி - 6, சீரகம்,

மஞ்சள் தூள் - தலா 1/2 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கு,

பால் அல்லது தேங்காய்ப்பால் - 1/2 கப்.

தாளிக்க கடுகு, உளுந்து - தலா 1/2 டீஸ்பூன்,

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,

கறிவேப்பிலை - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேகவைத்து எடுக்கவும். கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சிறு தீயில் வைத்து சீரகம்,  உளுத்தம்பருப்பு, முந்திரியை வறுத்து, பச்சைமிளகாய், தேங்காய்த்துருவல் கலந்து ஆறியதும் மிக்சியில் நைசாக அரைக்கவும். புடலங்காயை மெல்லிய  துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து வேகவிடவும். காய் முக்கால் பதம் வெந்ததும் பாசிப்பருப்பு, அரைத்த விழுதை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றி  கொதிக்க விடவும். பிறகு பால் சேர்த்து கலந்து தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கூட்டில் கொட்டி கலந்து இறக்கவும்.

Related Stories: