ஆண்டிபட்டி பகுதியில் மழை பெய்ய வேண்டி சிறப்பு கலச பூஜை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் மழை பெய்ய வேண்டி சிறப்பு கலச  நடந்தது. கர்நாடகா, கேரளா மாநிலங்களில் கடும் வெள்ளச் சேதம் ஏற்பட்ட நிலையிலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக நன்கு பெய்து வருகிறது. ஆனால், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே மழை இல்லாமல் கண்மாய், குளம், ஊரணிகள் காய்ந்து போய் உள்ளது. விவசாயம் கேள்விக்குறியானதோடு கடுமையான குடிநீர் பஞ்சமும் நிலவி வருகிறது. மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் பஞ்சம் தீரும் நிலை உள்ளது.

எனவே, ஆண்டிபட்டி, தேனி, போடி பகுதிகளைச் சேர்ந்த அம்மா பகவான் சேவா சமிதி அமைப்பினர் நேற்று முன்தினம் இரவு மழை வேண்டி கலச பூஜை செய்தனர்.பெண்கள் ஏராளமானோர் ஒன்றுகூடி  கலசங்களை வைத்து அகல் தீபம் ஏற்றி வழிபட்டனர். நிகழ்ச்சியை யோகநாதன் நடத்தினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் தண்டாயுதபாணி செய்திருந்தார்.

Related Stories: