பனந்தோப்பு முனியப்பன் கோயில் முப்பூஜை விழா

தர்மபுரி: தர்மபுரி அருகே நீலாபுரம் பனந்தோப்பு முனியப்பன் கோயிலில் முப்பூஜை விழா நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை அருகே நீலாபுரம் பனந்தோப்பு, முனியப்பன் கோயில் முப்பூஜை விழா கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 7.30 மணிக்கு முனியப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு ஆராதனை மற்றும் முப்பூஜைகள் நடந்தது.

Advertising
Advertising

இதையடுத்து புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் வழிபட்டனர். சாமிக்கு தட்டுவரிசை வைத்தும், குழந்தை பாக்கியம் நிறைவேறிய பக்தர்கள் எடைக்கு எடை காணிக்கை செலுத்தியும், முடி காணிக்கை நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, முனியப்பன் வகையறா மற்றும் ஊர் பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: