தேசிய விருது பிரிவுகளில் இந்திரா காந்தி, நர்கீஸ் தத் பெயர்கள் திடீர் நீக்கம்

புதுடெல்லி: தேசிய திரைப்பட விருதுகளின் ஒரு பகுதியாக இருந்த சிறந்த அறிமுகப் படத்துக்கான இந்திரா காந்தி விருது, தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த படத்துக்கான நர்கீஸ் தத் விருது ஆகிய பிரிவுகளின் பெயர்கள் திடீரென்று மாற்றப்பட்டுள்ளன. தேசிய விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகளை சீரமைப்பதற்கான குழு ஒன்றை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அமைத்தது. இது பரிந்துரை செய்தபடி, 70வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, ‘சிறந்த அறிமுகப் படத்துக்கான இந்திரா காந்தி விருது’ என்ற பெயரில் இருந்த பிரிவு, ‘சிறந்த அறிமுக திரைப்பட இயக்குனருக்கான விருது’ என்று மாற்றப்பட்டுள்ளது. அதுபோல், ‘தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்துக்கான நர்கீஸ் தத் விருது’ என்ற பிரிவு, ‘தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

‘சிறந்த அறிமுக திரைப்பட இயக்குனருக்கான விருது’ பெறும் இயக்குனருக்கு பதக்கமும், 3 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படும். ‘தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம்’ விருது பெறும் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு பதக்கமும், தலா 2 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படும். மேலும், இந்திய திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாஹேப் பால்கே விருதுக்கான பரிசுத்தொகை 10 லட்ச ரூபாயில் இருந்து 15 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

The post தேசிய விருது பிரிவுகளில் இந்திரா காந்தி, நர்கீஸ் தத் பெயர்கள் திடீர் நீக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: