சேத்துப்பட்டு அடுத்த பழம்பேட்டை திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி விழா

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அடுத்த பழம்பேட்டை திரவுபதி அம்மன் கோயிலில் நேற்று தீமிதி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சேத்துப்பட்டு அடுத்த பழம்பேட்டையில் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 17ம் தேதி அலகு நிறுத்தி அக்னி வசந்தவிழா தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் மகாபாரத சொற்பொழிவும், கட்டைக்கூத்து நாடங்களும் நடைபெற்று வந்தது.

நேற்று காலை முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, கோயில் வளாகம் முன் துரியோதனன் உருவபொம்மை அமைக்கப்பட்டிருந்தது. இதில்  துரியோதனனை வதம் செய்யும் காட்சியை நாடகக்கலைஞர்கள் தத்ரூபமாக நடித்துக் காட்டினர். பின்னர், மாலை தீமதி விழா நடந்தது. இதையொட்டி, விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: