பலன் தரும் ஸ்லோகம் : (சகல நன்மைகளும் கிட்ட...)

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட

மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரம்மனாட
Advertising
Advertising

கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட குஞ்சர முகத்தனாட

குண்டலமிரண்டாட தண்டைபுலி யுடையாட குழந்தை

முருகேசனாட ஞான சம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனியட்ட

பாலகருமாட நரை தும்பையறுகாட நந்திவாகனமாட நாட்டியப்

பெண்களாட வினையோட உனைப்பாட யெனைநாடி இது வேளை

விருதோடு ஆடி வருவாய் ஈசனே சிவகாமி நேசனே

எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.

நடராஜப் பத்து.

பொதுப் பொருள்:

மான், மழு, நிலவு, கங்கை, சிவகாமியம்மை, திருமால், நான்மறைகள், நான்முகன், தேவர்கள், விநாயகப் பெருமான், இரு செவி குண்டலங்கள், தண்டை, புலித்தோல் ஆடை, குமரன், ஞானசம்பந்தர், இந்திராதி அஷ்டதிக்பாலகர்கள், நந்தியம் பெருமான், நாட்டிய மகளிரோடு எம் வினையோடி உனைப்பாட எம்மை நாடி இதுவே வேளை என்று ஆடி வருவாய் சிவபெருமானே! சிவகாமி நேசனே! எம்மைப் பெற்ற தில்லைவாழ் நடராஜனே!

(இத்துதியை ஆனித் திருமஞ்சன தினத்தன்று (21.6.2018) பாராயணம் செய்தால் சகல நன்மைகளும் கிட்டும்.)

Related Stories: