ராமர் கோயில் விழாவில் பிரதமர்: பார்வதி பதிவால் பரபரப்பு

சென்னை: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள் நேரில் சென்றனர். இந்நிலையில், நடிகை பார்வதி, நமது நாடு மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயகம் உள்ள நாடு என்பதை குறிக்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் பதிவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார். அதில் இந்திய அரசின் ஜனநாயக தன்மையை வலியுறுத்தி, இந்திய மக்களுக்காக அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது என்று தெளிவான முன்னுரை அமைந்துள்ளது. மேலும் இறையாண்மை, சோசியலிஸ்ட், மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு, நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தேச ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் தலைப்பில் சில வரிகள் அவரது பதிவில் இடம்பெற்றுள்ளன. ஒரு நாட்டின் பிரதமரே ஒரு குறிப்பிட்ட மதத்தின் கோயில் விழாவில் பங்கேற்பது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் பார்வதி அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள சில வரிகளை தனது சமூக வலைத்தளத்தில் எடுத்துக் காட்டிய நிலையில் அவரை ரியல் சூப்பர் ஸ்டார் என்று கமெண்ட்கள் மூலம் சிலர் பாராட்டி வருகின்றனர்.

The post ராமர் கோயில் விழாவில் பிரதமர்: பார்வதி பதிவால் பரபரப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: